இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் 3 லட்சத்து 25 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதியாகி இருக்கும் என்று தெரிகிறது. இது சென்ற வருடத்தைவிட 30 விழுக்காடு அதிகம்.
வெங்காய ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணம், அரசு குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை குறைவாக நிர்ணயித்ததே. இது வரை வந்த தகவல் படி 3 லட்சத்து 17 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது (சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் ஏற்றுமதியானது).
தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு, எல்லா ஏற்றுமதியாளர்களிடம் இறுதியான தகவல்கள் வந்து சேரவில்லை. இந்த தகவல்களில் இருந்து மேலும் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும். ஜூன் மாதத்தில் மட்டும் 90,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.