அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
பங்குச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களினால் அந்நியச் செலவாணி சந்தையும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இனறு காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.37 / 43.38 ஆக இருந்தது.
டாலர் விலை அதிகமாக இருந்ததால், ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்தனர். அத்துடன் டாலர் வாங்குவதும் குறைந்த அளவே இருந்தது.
இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்து 1 டாலரின் விலை ரூ.43.31 / 43.32 ஆக உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய இறுதி நிலவரம் ரூ.43.33 / 43.34.