அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது.
பங்குச் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கம், பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 43.04/43.06 ஆக இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது டாலரின் மதிப்பு உயர்ந்து, 1 டாலரின் விலை ரூ.43.13/43.14 ஆக அதிகரித்தது.
இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 11 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 43.02/43.03