Publish Date: Wed, 25 Jun 2008 (12:46 IST)
Updated Date: Wed, 25 Jun 2008 (12:43 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 10 பைசா குறைந்தது.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தையும், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை நேற்று தலா அரை விழுக்காடு அதிகரித்தது.
இதனால் அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.86/42.87 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 10 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.96/42.97.