Publish Date: Tue, 24 Jun 2008 (12:18 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (12:16 IST)
அந்நியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ. 42.93/42.94 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 42.96/42.97
பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் டாலரின் தேவை குறைந்தது. ரிசர்வ் வங்கி சார்பாக சில வங்கிகள் டாலரை விற்பனை செய்கின்றன. அத்துடன் ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்தனர்.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஒரு டாலரின் மதிப்பு ரூ. 42.95/42.96 என்ற அளவில் இருந்தது. பிறகு டாலரின் வரத்து அதிகரித்ததாலும், பங்குச் சந்தையில் உயர்வு காணப்பட்டதாலும் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.