Publish Date: Fri, 20 Jun 2008 (13:18 IST)
Updated Date: Fri, 20 Jun 2008 (13:18 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலரின் மதிப்பு குறைந்து 1 டாலர் ரூ.42.92 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 4 பைசா குறைவு.
ஆனால் சிறிது நேரத்திலேயே டாலரின் மதிப்பு அதிகரித்து, 42.95 / 42.96 என்று விற்பனையானது.
கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், அந்நியச் செலவாணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கவில்லை. அத்துடன் பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் தேவை குறைவாக இருந்தது.
இன்று பணவீக்கம் பற்றிய தகவலை பொறுத்தே, பங்குச் சந்தையில் பாதிப்பு இருக்கும். இதன் எதிரொலி அந்நியச் செலவாணி சந்தையில் இருக்கும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.43 என்ற அளவை தொட்டால், ரிசர்வ் வங்கி தலையிட்டு ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்கும் படி தேவையான நடவடிக்கை எடுக்கும் என வர்த்தகர்கள் கருதுகின்றனர்.