Publish Date: Fri, 20 Jun 2008 (12:11 IST)
Updated Date: Fri, 20 Jun 2008 (12:10 IST)
மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக பொறுப்பில் இல்லாத தலைவரான சேகர் தத்தா, தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதே போல் இயக்குநர் ஜாம்ஷெட் கோத்ரேஜ் இயக்குநர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர்களின் ராஜினாமாவுக்கான காரணத்தை மும்பை பங்குச் சந்தை தெரிவிக்கவில்லை.
கிரிவ்ஸ் காட்டனின் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான சேகர் தத்தா, 2006 ஆம் ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் இயக்குநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது இவர் பாரத் ஹெவி நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஜாம்ஷெட் கோத்ரேஜ், கோத்ரேஜ் அண்ட் போய்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.