Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!
, வியாழன், 5 ஜூன் 2008 (16:23 IST)
தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்த மத்திய அரசு ரூ.188 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புது டெல்லியில் மத்திய அமைச்சரவையின் பொருளாதாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்த ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மத்திய செய்தி மற்றும் தகவல் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

இதன்படி தூத்துக்குடி துறைமுகத்தில் பெட்டகத்தை (கன்டெய்னர்) ஏற்றி வரும் நான்காம் தலைமுறை பெருங் கப்பல்கள் வந்து செல்ல வசதியாக, ஆழ்கடலில் இருந்து துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும் பாதை ஆழப்படுத்தப்படும்.

மத்திய அரசு ரூ.538 கோடி செலவில் இந்த பாதையை ஆழப்படுத்தவும், கப்பல் தளத்தை மேம்படுத்துவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி 56 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் வந்து செல்லும் வகையில் கடல் பாதை 12.80 மீட்டருக்கு ஆழப்படுத்தப்படும். இதே போல் கடல் அலையின் மேல் மட்டத்தில் இருந்து 14.70 மீட்டர் ஆழப்படுத்தப்படும். இந்த பாதை 230 மீட்டர் அகலத்திற்கு, 3.4 கீ.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும்.

இத்துடன் துறைமுக ஆழ்கடல் பகுதியில் இருந்து கப்பல்கள் துறைமுகத்தை நோக்கி திரும்புவதற்கு வசதியாக கடலின் ஆழம் 14.1 மீட்டர் ஆழப்படுத்தப்படும்.

இதற்காக மொத்தம் ரூ.538 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.188.3 கோடி (35 விழுக்காடு) மத்திய அரசு மானியமாக வழங்கும். மீதம் உள்ள ரூ.349.70 கோடியை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகம் ஏற்கும். இதை துறைமுக நிர்வாகம் அதன் உள் நிதியில் இருந்தோ அல்லது கடன் வாங்கியோ செலவழிக்கும்.

பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் துறைமுகம் ஆழப்படுத்துவதால், கப்பல் போக்குவரத்து கட்டணமும், நேரமும் குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil