Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலைக் கட்டுப்பாடு ர‌த்து? பெட்ரோல் விலை ரூ.16 உயரலா‌ம்!

விலைக் கட்டுப்பாடு ர‌த்து? பெட்ரோல் விலை ரூ.16 உயரலா‌ம்!
, திங்கள், 26 மே 2008 (18:00 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பைத் தடுக்க பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கவிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று அரசு முடிவெடுத்தால், இன்றுள்ள கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.16.34 உயர்த்தப்படும்.

இத்தகவலை மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

“கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் ஏற்படும் நட்டத்தை தடுக்க இப்பொழுதுள்ள ஒரே வழி, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதுதான். ஆனால் டீசல் மீதான விலைக் கட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் 3 ரூபாய் உயர்த்தப்படும்” என்று அந்த அதிகாரி கூறியதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

இன்றுள்ள கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.16.34ம், டீசல் லிட்டருக்கு ரூ.23.49ம் நட்டத்தில் விற்கப்படுவதாகவும், பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கப்படும் நிலையில், அதன் விலை லிட்டருக்கு ரூ.16.34 உயர்த்தப்படுவது மட்டுமின்றி, கச்சா விலை ஏற்றம் - இறக்கத்திற்கு ஏற்றவாறு இதற்குமேல் விலை நிர்ணயிக்கப்படும்.

கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ.2,00,000 கோடி இழப்பு ஏற்படுமெனவும், அந்த இழப்பை குறைக்க கச்சா மீதான இறக்குமதி தீர்வையை முற்றிலுமாக நீக்கிவிடுமாறு பெட்ரோலியத் துறை விடுத்த கோரிக்கையை நிதியமைச்சகம் நிராகரித்ததையடுத்தே இம்முடிவு குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறியுள்ள அந்த அதிகாரி, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தித் தீர்வையை குறைக்குமாறு விடுத்த கோரிக்கையையும் நிதியமைச்சகம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, பெட்ரோல் விலை அதிகரிக்கப்படுவதால் பணவீக்கம் பெருமளவு அதிகரிக்காது என்பதும், அதே நேரத்தில் டீசல் விலையேற்றப்பட்டால் அதன் காரணமாக போக்குவரத்து கட்டணம் அதிகரித்து, அத்‌தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாகி, அதனால் பணவீக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.

பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கி, விலையை உயர்த்தினாலும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு ரூ.20,000 அளவிற்கு மட்டுமே குறையும். டீசலினால் ஏற்படும் இழப்பே மொத்த இழப்பு மதிப்பீட்டில் பாதிக்கும் மேலாகும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil