Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விற்பனை வரி தணிக்கை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

விற்பனை வரி தணிக்கை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
, வெள்ளி, 16 மே 2008 (19:50 IST)
விற்பனை வரி தணிக்கை சான்றகளை பட்டய கணக்காளார்களும், மதிப்பீட்டு கணக்காளர்கள் மட்டுமே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு :

மகாராஷ்டிர மாநில அரசு, மகாராஷ்டிர மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.

இதன்படி வருடத்திற்கு ரூ.40 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யும் நிறுவனங்கள், அவற்றின் விற்பனை வரி கணக்கை பட்டய கணக்காளர்கள் (ஆடிட்டர்) அல்லது மதிப்பீட்டு கணக்காளர்களிடம் (காஸ்ட் அக்கவுண்டென்ட்) மட்டுமே தணிக்கை செய்து, தணிக்கை சான்றிதழையும், விற்பனை வரி பற்றிய அறிக்கையையும் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு முன் வியாபாரிகள் விற்பனை வரி வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள், விற்பனை வரி துறையில் வேலை பார்த்து ஒய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு விற்பனை வரி கணக்கை சமர்ப்பித்தனர்.

புதிய சட்ட திருத்தத்தின் படி, விற்பனை வரி கணக்குகளை பட்டய கணக்காளர் அல்லது மதிப்பீட்டு கணக்காளரிடம் தணிக்கை செய்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

விற்பனை வரி பற்றி பிரச்சனை இருந்தால் விற்பனை வரி ஆணையாளர், அல்லது விற்பனை வரி மேல்முறையீட்டு மன்றத்தில் நடக்கும் வழக்கில் விற்பனை வரி வழக்கறிஞர், ஒய்வு பெற்ற விற்பனை வரி அதிகாரிகள் வியாபாரிகள் சார்பில் ஆஜராகி வழக்கு நடத்தாலாம். எக்காரணத்தை கொண்டும் இவர்கள் கணக்கு தணிக்கை செய்து சான்றிதழ் வழங்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் மகாராஷ்டிரா விற்பனை வரி கணக்காளர்கள் சங்கம், மகாராஷ்டிரா வழக்கறிர்கள் சங்கம் ஆகியவை வழக்கு தொடுத்தன.

இவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசணம் வழங்கியுள்ள சம உரிமைக்கு எதிராக உள்ளது. அத்துடன் வியாபாரிகள் பட்டய கணக்காளரிகளிடம், விற்பனை வரி கணக்கை தணிக்கை செய்வதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், மாநில அரசின் சட்டதிருத்தம் செல்லும் என்று தீர்பளித்தது.

அத்துடன் இதன் தீர்ப்பில், 1961 ஆம் வருட வழக்கறிஞர் சட்டத்தின் படி, வழக்கறிர்கள் வழக்கு மட்டுமே நடத்த முடியம். இதன்படி அவர்கள் கணக்கு தணிக்கை செய்வது தடுக்கப்படுகிறது. கணக்கை தணிக்கை செய்யும் பணியை, இதில் தகுதி பெற்றவர்களாலும், பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறியது.

மும்பை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில், மகாராஷ்டிரா விற்பனை வரி கணக்காளர்கள் சங்கம், மகாராஷ்டிரா வழக்கறிர்கள் சங்கமமும் மேல் முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.கே.சீமா, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜீ ஆகியோரை கொண்ட அமர்வு நீதி மன்றம், செவ்வாய்கிழமை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, மகாராஷ்டிர மாநில அரசின் சட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

Share this Story:

Follow Webdunia tamil