வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைக்கு முக்கியமான நாள். ஏனெனில் இன்று நண்பகலில் பணவீக்கம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இதன் தாக்கம் பங்குச் சந்தையில் பெரிய அளவு இருக்கும்.
நேற்றைய பங்குச் சந்தையின் போக்கை உற்று கவனித்தால், இன்று வர்த்தகம் தொடங்கும் போதே நிஃப்டி 15 முதல் 20 புள்ளிகள் வரை அதிகரித்து இருக்கும். வர்த்தகம் நடக்கும் போது நிஃப்டி 5130-5140 என்ற அளவில் நிலை கொள்ளும்.
பிறகு 5175-5190 வரை உயர வாய்ப்பு உள்ளது. 5190 என்ற அளவு உயர்ந்த பிறகு, சிறிது நேரம் குறைய வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு குறைந்த நேரத்திற்கு நிஃப்டி 5215-5225 என்ற அளவிற்கு உயரும்.
நிஃப்டி 5190 என்ற அளவை எட்டிய பிறகு இலாப கணக்கு பார்க்க பங்குகளை விற்பனை செய்யும் போக்கை காணலாம். ஏனெனில் திங்கட்கிழமை புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பங்குச் சந்தை விடுமுறை.
இதற்கு மாறாக நிஃப்டி குறைந்தால், 5100-5075 என்ற அளவு வரை குறைய வாய்ப்பு உண்டு. 5075 என்ற அளவை விட குறைந்தால், அடுத்த கட்டமாக சிறிது நேரத்திற்கு 5050-5015 என்ற அளவுக்கு குறையும்.
நாளை பிரஜா இன்டஸ்டிரிஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ், டி.எல்.எப், செயில், சீமென் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
நேற்றைய கண்ணோட்டம்!
பங்குச் சந்தை நேற்று குறியீட்டு எண்கள் உயர்ந்த நிலையில் தொடங்கியது. காலையில் இருந்து மாலை வரை பங்குச் சந்தை ஏறுமுகமாகவே இருந்தது. நிஃப்டி 5100 ஐ தாண்டியது. அதே போல் சென்செக்ஸ் 17,300 க்கும் அதிக அளவாக இருந்தது.
ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இரண்டு விதமான போக்கு இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், இயந்திர தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.