Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிஃப்டி உயரும்!

- ராஜேஷ் பல்வியா

நிஃப்டி உயரும்!
, வியாழன், 15 மே 2008 (10:17 IST)
பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே சாதகமான நிலைதான் இருக்கும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 15 முதல் 20 புள்ளிகள் வரை உயரும். இன்று நிஃப்டி காலையில் 5025-5030 என்ற அளவில் இருக்கும்.

இது வர்த்தகம் நடக்கும் போது குறையாமல் இருக்க வாய்ப்பு உண்டு. அதன் பிறகு 5055-5080 வரை உயர வாய்ப்பு உள்ளது. இன்று அதிகபட்சம் 5080 வரை உயரவே வாய்ப்பு உண்டு. அதற்கு மேல் அதிகரித்தால் குறைந்து விடும். அதிக அளவு பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பார்கள். இதன் காரணமாக நிஃப்டி 5120 வரை உயர வாய்ப்பு உள்ளது.

இதற்கு மாறாக நிஃப்டி குறைந்ததால் 4990 என்ற அளவில் நிலை கொள்ளும். இந்த அளவுக்கும் மேல் குறைந்தால், இலாப கணக்கு பார்ப்பதற்காக, அதிக அளவு பங்கு விற்பனைக்கு வரும். மிக குறுகிய நேரத்திற்கு நிஃப்டி 4960-4940 என்ற அளவிற்கு குறைய வாய்ப்பு உள்ளது.

இன்று பிரஜா இன்டஸ்டிரிஸ், ஐ,எப். சி.ஐ, ஐ.டி.எப்.சி, டிஸ்கோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹின்டால்கோ ஆகிய பங்குகளில் அதிகளவு வர்த்தகம் நடக்கும்.

நேற்று நிஃப்டி 5000 ஆயிரத்தை தாண்டியது!

தேசிய பங்குச் சந்தையில் மதியத்திற்கு பிறகு, பங்குச் சந்தை உயர்வால், நேற்று நிஃப்டி 5 ஆயிரத்திற்கு மேல் முடிந்தது. இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்பம். உலோக நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை நண்பகலுக்கு பிறகு தொடர்ந்து அதிகரித்ததே.

நேற்று நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. நிஃப்டியும் 5000 தாண்டி முடிந்தது. பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பில், அரசு 50 விழுக்காடு மட்டுமே ஈடுசெய்யும் என்று வந்த தகவலால், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது. இதனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இலாபம் அதிகரிக்கும். இதனால் தகவல் தொழில் நுட்ப பிரிவு பங்கு விலை அதிகரித்தது.

மத்திய பெட்ரோலிய துறை செயலாளரிடம் இருந்து வந்த தகவல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை, நேற்றைய பங்குச் சந்தையின் வர்த்தகத்திற்கு முக்கிய காரணிகளாக இருந்தன.

Share this Story:

Follow Webdunia tamil