அந்நிய நேரடி முதலீடு, இது வரை இல்லாத அளவிற்கு 210 பில்லியன் டாலர் வந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் அந்நிய முதலீடு, நிதி நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. இந்த முதலீட்டை பங்குச் சந்தையில் செய்யும் முதலீடு போல், உடனே பங்குகளை விற்பனை செய்து திரும்ப பெற முடியாது.
அந்நிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் செய்யும் முதலீடு, குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தான் திரும்ப பெற முடியும். இவ்வகை முதலீடுகளையே அந்நிய நேரடி முதலீடு என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிதி ஆண்டில் (2007-08) பிப்ரவரி மாதம் வரை 210 பில்லியன் டாலர் (1 பில்லியன்-100 கோடி) அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. அத்துடன் இதுவரை இல்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக, இந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.
சென்ற நிதி ஆண்டில் (2006 ஏப்ரல்-பிப்ரவரி 2007) அந்நிய நேரடி முதலீடு 11.8 பில்லியன் டாலர் மட்டுமே வந்து இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை 11 மாதத்தில் 210 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வந்துள்ளது.
இதிலிருந்து இந்தியாலில் பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் அந்நிய முதலீடு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது தெரியவருகிறது.