Newsworld Finance News 0804 04 1080404038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்வு!

Advertiesment
பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்வு!
, வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (15:58 IST)
பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவில் 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

மார்ச் 22ஆம் தேதி முடிந்த வாரத்தில் பணவீக்கம் 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் பணவீக்கம் 6.68 விழுக்காடாக இருந்தது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6.54 விழுக்காடாக இருந்தது.

மார்ச் 22ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் 224.8 ஆக அதிகரித்து உள்ளது. இது சென்ற வாரம் 223.6 ஆக இருந்தது.

உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.1 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 226.2 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் பருப்பு வகைகள், பழங்கள், மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் மீன் விலை 4 விழுக்காடு, தனியா, நறுமன பொருட்களின் விலைகள் 2 விழுக்காடு குறைந்துள்ளது.

எள், எண்ணெய் கடுகு, விலை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கொப்பரை தேங்காய் விலை 2 விழுக்காடு, கடலை பயறு 1 விழுக்காடு குறைந்துள்ளது.

நெய், பருத்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய், வெல்லம் விலை 1 விழுக்காடு குறைந்துள்ளது.

உலோக பொருட்களின் விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்து அட்டவணை எண் 280.20 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil