Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை போக்கு எப்படி?

-ராஜேஷ் பல்வியா

பங்குச் சந்தை போக்கு எப்படி?
, திங்கள், 10 மார்ச் 2008 (09:39 IST)
இனி வரும் நாட்கள் பங்குச் சந்தை ஒரே நிலையாக இருக்காது. பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். குறியீட்டு எண்களும் உயரும், அதே போல் சரியும். இந்த நிலை அமெரிக்க பொருளாதார நெருக்கடி தீரும் வரை தொடரும்.

நாம் இந்தியா உட்பட எல்லா நாடுகளின் பங்குச் சந்தைகளையும் ஆய்வு செய்தோமானால், எல்லா நாட்டு பங்குச் சந்தைகளும் சிறப்பாகவே உள்ளன. ஆனால் அமெரிக்க மறுஈட்டு கடன் நெருக்கடிக்கு பிறகு தான், பங்குச் சந்தை சரிவு என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

பங்குச் சந்தைகள் உயரவேண்டுமானால் உள்நாட்டு அல்லது மற்ற நாட்டு தகவல்கள் சாதகமாக இருந்தால்தான் நடக்கும். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து, வருவாய் தொடங்கும் (இதை முன் கூட்டியே கணிப்பது கடினம், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்க போவதை மட்டும்தான் கணிக்க முடிகின்றது). வருவாய் அதிகமாக இருந்தால் பங்குச் சந்தைகள் அதிகரிக்கும். இந்திய பங்குச் சந்தை குறுகிய கால மற்றம் நடுத்தர கால வருவாய்க்கு, மற்ற நாட்டு பங்குச் சந்தைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இதனால் தான் அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது.

முன்பு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தால், 3 முதல் 6 மாதங்களில் பழைய நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் இந்த முறை குறியீட்டு எண்கள் அதிகரிக்க அதிக மாதங்களாகும். முதலீட்டாளர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கை சிதைந்துள்ளது. இவை சரியாவதற்கு சில காலமாகும் என்று கருதுகின்றோம்.

அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீட்டு எண் டோவ் ஜோன்ஸ் குறியீட்டு எண் அடிக்கடி அதிகரித்து குறைகின்றது. இது 11,250 வரையிலும் போகும். அப்போது இதன் தாக்கம் மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் இருக்கும்.

தேசிய பங்குச் சந்தை ஆய்வு செய்தால், நிஃப்டி 4,800 என்ற அளவை விட குறைந்துள்ளது. பிறகு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நிஃப்டி 4,800 என்ற அளவை விட சில நாட்களிலேயே குறைந்தால் பிறகு தொடர்ந்து குறைந்து 4,660/444, 4,200 என்ற அளவிற்கு வந்துள்ளது.

இனி வரும் நாட்களில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,900 என்ற அடிப்படை நிலை என்று எடுத்துக் கொண்டால் 4,810, 4,725, 4,660, 4,440 வரை குறையலாம்.

அதே போல் 4,990, 5,050, 5,155, 5,340 என்ற அளவுகளிலும் அதிகரிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil