வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலை, டெல்லியில் 10 கிராம் ரூ.13 ஆயிரத்தை எட்டியுள்ளது.
லண்டனில் தங்கத்தின் மீதான முதலீடு இன்று அதிகரித்தால் 24 காரட் தங்கத்தின் விலை இதுவரையில் இல்லாத அளவுக்கு 995 டாலராக அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ.200 குறைந்த நிலையில், இன்று ரூ.400 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.13,050 ஆக அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து 8 கிராமுக்கு ரூ.10,050 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் கடந்த 27 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,355 அதிகரித்து ரூ.26,400 ஆக இருந்தது.
வெள்ளி நாணயங்களின் விலையும் ரூ.200 அதிகரித்து, 100 நாணயங்களின் விலை ரூ.27,000 ஆக உயர்ந்துள்ளது.