Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பங்குகளின் விலை உயரும்?

-ராஜேஷ் பல்வியா

இன்று பங்குகளின் விலை உயரும்?

Rajesh Palviya

, புதன், 27 பிப்ரவரி 2008 (10:22 IST)
இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீடடு எண்கள் அதிகரித்து இருக்கும். நிஃப்டி 20 முதல் 30 புள்ளிகள் அதிகரித்து இருக்கும்.

நிஃப்டி 5290-5300 என்ற அளவில் இருக்கும். நாள் முழுவதும் நிஃப்டி 5255 என்ற அளவிற்கும் மேல் இருந்தால், நாள் முழுவதும் பங்குகளின் விலை குறையாமல் சீராக இருக்கும்.

நிஃப்டி 5300/5335/5370 என்ற அளவில் இருக்கும். ஒரு வேளை 5370 க்கும் மேல் உயர்ந்தால், பங்குகளை அதிக அளவு வாங்குவார்கள். இதனால் பங்குகளின் விலை அதிகரிக்கும். நிஃப்டி குறைந்த நேரத்திற்கு 5400/5440 என்ற அளவு அதிகரிக்கும்.

இதற்கு மாறாக நிஃப்டி 5245/5205/5170 என்ற அளவு குறைந்து, 5170 க்கும் குறைந்தால் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் பங்கு விலை மேலும் குறைந்து, நிஃப்டி 5140/5110 என்ற அளவு குறையும்.

இன்று ரிலையன்ஸ் பவர்,ஹின்டால்கோ,ஓ.என்.ஜி.சி,டாடா கெமிக்கல்ஸ்,ஏ.சி.சி,ஜே.பி.அசோசியேட்,புஞ்ச் லாயிட்ஸ்,யெஸ் பாங்க் ஆகிய பங்குகள் அதிக அளவு விற்பனையாகும்.

நேற்றைய கண்ணோட்டம்

பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நாள் முழுவதும் பங்கு விலைகள் அதிக வித்தியாசம் இல்லாமல் வர்த்தகம் நடந்தது. முன் பேர வர்த்தகத்தில் நேற்று கணக்கு முடிக்கும் நாள். இதனால் சில பங்குகளின் விலை அதிகரித்தது. எப்படி இருப்பினும், பங்குகளின் விலை அதிக அளவு குறையவில்லை. அதே நேரத்தில் குறைந்த அளவு பங்குகளே விற்பனையாயின.

நேற்று குறிப்பிட்ட சில பங்குகள் அதிக அளவு விற்பனையாயின. ரியல் எஸ்டேட்,மின் உற்பத்தி,உலோக உற்பத்தி,இயந்திர உற்பத்தி,தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் விற்பனையாயின. இந்த மாதத்தில் நேற்று இரண்டாவது தடவையாக அதிக தொகைக்கு வர்த்தகம் நடந்தது.

நேற்று ஆன்மொபைல்,பாங்க் ஆப் இந்தியா,சி.எம்.சி,ஜீ.எம்.ஆரஇன்ப்ரா, பார்டிரானிக்ஸ், ஜே.பி.அசோசியேட்ஸ், பி.பி.சி.எல், ஐ.ஒ.சி., எஸ்ஸார் ஆயில், குஜராத் கோக், ரிலையன்ஸ் எனர்ஜி, இந்தியா சிமென்ட், கிரேசம், ரேணுகா சுகர், ஜிந்தால் ஸ்டெயின்லெஸ ஆகிய பங்குகள் விற்பனையாயின. நேற்று மொத்தம் ரூ.72,389 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

Share this Story:

Follow Webdunia tamil