பங்குச் சந்தைகளின் நேற்றைய போக்கை பார்த்தால், பங்குகளை சிலர் மட்டுமே வாங்கினார்கள். இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 20 முதல் 40 புள்ளிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காலையில் நிஃப்டி 5200 முதல் 5220 வரை உயர வாய்ப்பு உள்ளது. அதற்கு பிறகு மேலும் அதிகரிக்கும்.
இன்று நிஃப்டி 5185 க்கும் குறைவாக சரிய வாய்ப்பில்லை.
இன்று பங்குச் சந்தையின் வர்த்தகத்தில் நிஃப்டி 5220/5250/5300 என்ற அளவுகளில் இருக்கும். 5300 க்கும் மேல் அதிகரித்தால், பங்குகளை அதிக அளவு வாங்குவதை காணலாம். இதனால் குறைந்த நேரத்திற்கு 5340/5390 என்ற அளவில் உயர வாய்ப்புள்ளது.
இதற்கு மாறாக நிஃப்டி 5160/5125/5070 என்ற அளவுகளில் குறைந்தால், பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் நிஃப்டி 5030/5000 என்ற அளவிற்கு குறையும்.
இன்று ரோல்டா,சத்யம்,போலாரிஸ்,ஜே.பி.அசோசியேட்ஸ்,ஹெச்.டி.ஐ.எல்,ஆன் மொபால்,ரிலையன்ஸ் பவர்,பஜாஜ் ஆட்டோ,ஹின்டால்கோ, ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும்.
நேற்றைய பங்குச் சந்தை கண்ணோட்டம்
பங்குச் சந்தைகளில் நேற்று குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
இறுதியில் சென்செக்ஸ், நிஃப்டி அதிகரித்தது. அமெரிக்கா மற்றும் ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்தது. காலையில் பங்குகளின் விலை அதிகரித்தாலும், பிறகு குறைய ஆரம்பித்தது. ஆனால் இறுதியில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பங்குகளின் விலைகள் அதிக வித்தியாசத்துடன் இருந்தது.
கடந்த ஐந்து மாதங்களாக குறைந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து. இதனால் மென் பொருள் நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. சென்செக்ஸ் 117 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 17734..68 ஆகவும், நிஃப்டி 37 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5191 ஆக முடிந்தது.
நேற்று தகவல் தொழில் நுட்பம், சர்க்கரை ஆலைகளின் பங்கு விலை அதிகரித்தது. வங்கிகளின் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்தனர். நிட் டெக்,ஹெக்ஸ்வேர்,சத்யம்,டிஸ்கோ,பஜாஜ் ஹிந்த்,ரேணுகா சுகர்,ஜி.எம்.ஆர்.இன்ப்ரா,ராஜஸ்தான் வங்கி,பஜாஜ் ஆட்டோ,சன் பார்மா ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது. நேற்று மொத்தம் ரூ.60,978 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.