பங்குச் சந்தையின் நேற்றைய நிலவரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இன்று வர்த்தகம் தொடங்கும் போதே நிஃப்டி 20 முதல் 30 புள்ளிகள் வரை குறைந்து இருக்கும்.
இந்திய நேரப்படி புதன் கிழமை மாலை அமெரிக்க நுகர்வோர் புள்ளி விபரம் வெளியிடப்படுகிறது. இதன் எதிரொலி அமெரிக்க பங்குச் சந்தையில் இருக்கும். இதன் பாதிப்பு இந்தியா உட்பட மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் இருக்கும்.
நிஃப்டி 5180 க்கும் குறைந்தால், இது மேலும் சரிந்து 5000 என்ற அளவிற்கு குறைந்து விடும்.
பிறகு நிஃப்டி 5180/5245/5300 என்ற அளவில் வர்த்தகம் நடந்தால், 5300 க்கும் மேல் அதிகரித்து குறைந்த நேரத்திற்கு 5330/5380 என்ற அளவை எட்டும்.
இதற்கு மாறாக நிஃப்டி 5100/5030/4950 என்ற அளவை விட குறைந்தால், 4950 என்ற அளவிற்கு சரிந்து 4900/4820 என்ற அளவிற்கு குறையும்.
நேற்றைய பங்குச் சந்தை கண்ணோட்டம்!
அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவால், இந்திய பங்குச் சந்தையும் நேற்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே சரிவை எதிர்கொண்டது. பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை செவ்வாய் கிழமையன்று ஒரு பீப்பாய் 100 டாலர் என்ற அளவில் விலை அதிகரித்தது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தன.
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே, குறியீட்டு எண்கள் குறைந்தன. இது மாலை வரை முன்னேற்றம் அடையாமல் இறுதியில் குறைந்தது.
சென்செக்ஸ் 458 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 17,671 ஆகவும், நிஃப்டி 126 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,154 ஆகவும் சரிந்தது.
நேற்று நெய்வேலி லிக்னைட், பாம்பே டையிங், ஜே.பி.அசோசியேட், டைட்டான், டாடா பவர், பஜாஜ் ஹிந்த், பல்ராம்பூர் சின்னி, ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ், நாகர்ஜுனா பெர்டிலைசர், குஜராத் ஸ்டேட் பெர்டிலைசர் ஆகிய பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது. நேற்று மொத்தம் 55,269.78 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.