பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, ஊரக மின்கட்டுமான கழக (Rural Electrification Corporation) பொதுப் பங்குக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இதன் பங்குகளுக்கு இன்று திட்டமிட்டபடி விண்ணப்பம் செய்வது துவங்கியது.
இந்த பங்கு வெளியீட்டிற்கு இன்வெஸ்ட்மென்ட் பாங்காரக (முதலீடு வங்கி) இருந்த நிறுவனத்தின் தகவல்படி, இன்று காலை பங்குகளுக்கு விண்ணப்பம் வாங்க துவங்கிய முதல் 27 நிமிடத்திலேயே மொத்த பங்குகளுக்கும் விண்ணப்பம் வந்து விட்டதாக தெரிவித்தனர்.
மத்திய அரசு நிறுவனமான ஊரக மின்கட்டுமான கழகம், மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும்.
இது ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ரூ.90 முதல் ரூ.105 என்ற விலையில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 15 கோடியே 61 ஆயிரத்து 20 ஆயிரம் பங்குகளை வெளியிட்டுள்ளது.
இதற்கு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாளுக்குள் குறைந்தபட்சம் பத்து மடங்கிற்கும் அதிக விண்ணப்பம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.