ஏலத்தின் மூலம் ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்கள் விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்துத் தமிழக அரசு நிதித்துறை செயலர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை-கோட்ட அலுவலகத்தில் பிப்ரவரி 15, 2008 அன்று நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.