ப்யூச்சர் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு நேற்று மும்பை, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.
இதன் மூலம் இந்த இரண்டு பங்கு சந்தைகளிலும், இதன் விற்பனை நேற்று துவங்கியது. காலையில் தேசிய பங்குச் சந்தையில் இந்த பங்கின் விலை ரூ.1,081 ஆக இருந்தது. இது இதன் விலையை விட 41.3 விழுக்காடு அதிகம் (ஒதுக்கீடு விலை ரூ.765).
பிறகு இதன் விலை ரூ.825 வரை குறைந்து இறுதியில் ரூ.909.80 ஆக முடிந்தது.
இதேபோல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, இதன் விலை ரூ.1,044 ஆக இருந்தது. இது பங்கின் ஒதுக்கீட்டு விலையை விட 36.47 விழுக்காடு அதிகம். வர்த்தகம் நடந்த போது இதன் விலை ரூ.1,100 வரை அதிகரித்தது. அதே போல் ரூ.826.10 வரை குறைந்தது. பிறகு இறுதியில் ரூ.908.20 ஆக முடிந்தது.
இந்நிறுவனம் 64.22 லட்சம் பங்குகளை வெளியிடுவதாக அறிவித்தது. இதற்கு மொத்தம் 85.7 கோடி பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வந்தன.11.71 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்தன.