Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரிலையன்ஸ் பவர் பங்கு ஒதுக்கீடு!

ரிலையன்ஸ் பவர் பங்கு ஒதுக்கீடு!
, சனி, 2 பிப்ரவரி 2008 (14:27 IST)
ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவது ஆரம்பமாகியுள்ளது.

அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு வெளியீடு ஜனவரி 15 ஆம் தேதி துவங்கியது. இந்நிறுவனம் ரூ.10 முகமதிப்புள்ள ஒரு பங்குன் விலை ரூ.405 முதல் ரூ.450 வரை என நிர்ணயித்திருந்தது. மொத்தம் 26 கோடி பங்குகளை வெளியிட்டது.

இதில் சிறு முதலீட்டார்களுக்கு ரூ.20 சலுகை வழங்கி, ஒரு பங்கின் விலை ரூ.430 என அறிவித்தது.

இதற்கு ஆரம்பத்தில் இருந்தே சிறு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் உட்பட எல்லா பிரிவினர் மத்தியிலும் அதிக வரவேற்பு இருந்தது.

இந்த பங்குக்கு விண்ணப்பிக்க பலர், ஏற்கனவே வைத்துள்ள பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை குறைந்தது.

பல்வேறு வட்டாரங்களில் பலத்த எதிர்பாப்பை உருவாக்கிய இதன் பங்கு ஒதுக்கீடு துவங்கியுள்ளது.

இதில் 225 பங்குகளுக்கும் குறைவாக விண்ணப்பித்த சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்கள் விண்ணபிக்கும் போது, செலுத்திய பணம் திருப்பி வழங்கப்படும்.

இந்நிறுவனம் 225 பங்குகளுக்கும் மேலாக விண்ணப்பித்த (குறைந்தபட்சம் ரூ.96,750) 41 லட்சத்து 70 ஆயிரம் சிறு முதலீட்டாளர்களுக்கு தலா 225 பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளது.

மொத்த பங்குளில் 30 விழுக்காடு சிறு முதலீட்டாளறர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு 13.6 மடங்கு விண்ணப்பங்கள் வந்து உள்ளன.

உள்நாட்டு மற்றும் அந்நிய தகுதிபெற்ற முதலீட்டாளர்கள் பிரிவில் 446 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் விண்ணப்பித்த பங்குகளில் 1.2 விழுக்காடு பங்குகள் மட்டுமே வழங்கப்படுகிறது. (இந்த பிரிவுக்கு 82.5 மடங்கு விண்ணப்பங்கள் வந்து இருந்தன)

இதே போல் அதிக செல்வம் படைத்த பிரிவினருக்கு விண்ணப்பித்த பங்குகளில் 0.6 விழுக்காடு மட்டுமே வழங்கப்படுகிறது. (இந்த பிரிவுக்கு 159.6 மடங்கு விண்ணப்பங்கள் வந்து இருந்தன)

பங்குகள் ஒதுக்கப்படாதவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்துடன் செலுத்திய முன் பணம் நேற்று முதல் திருப்பி வழங்கப்படுகிறது என இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil