உற்பத்தித் துறையின் வலுவான வளர்ச்சி கடந்த 2006 -07 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.6 விழுக்காடாக உயர அடிப்படையாக இருந்துள்ளது. முந்தைய நிதியாண்டைவிட இந்தக் காலத்தில் 0.2 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் தனி நபர் சராசரி வருவாய் அதிகரித்துள்ளது.
கடந்த 2005 - 06 ஆம் ஆண்டில் ரூ.26,12,847 கோடியாக இருந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 விழுக்காடு அதிகரித்து 2006 -07 நிதியாண்டில் 28,64,309 கோடியாக அதிகரித்துள்ளது.
தற்போதைய விலை அடிப்படையில் கடந்த 2005 -06 ஆம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.25,956 ஆக இருந்தது, 14.2 விழுக்காடு அதிகரித்து கடந்த 2006 -07 ஆம் நிதயாண்டில் ரூ.29,642 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் வளர்ச்சிக்கு சிலத்துறைகளின் அதிகபட்ச வளர்ச்சிதான் அடிப்படையாக அமைந்தது. கடந்த நிதியாண்டில் நிலக்கரி - சுரங்கத் துறை (5.7%), உற்பத்தித் துறை (12%), மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் (6%), கட்டுமானத்துறை 12 விழுக்காடு வளர்ச்சியும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.