பட்ஜெட் உங்கள் எதிர்பார்ப்பு என்ன ?
, வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:49 IST)
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் பிப்ரவரி 29 ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.மாநில அரசின் நிதி நிலை அறிக்கையை விட, மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை முக்கியத்துவமானது. இதில்தான் அடுத்த வருடத்திற்கு கல்வி, நலவாழ்வு, வேளாண்மை, பாதுகாப்பு உட்பட மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இதன் அடிப்படையிலேயே மாநில அரசுகளின் நிதி நிலை அறிக்கையும் இருக்கும். அத்துடன் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்தான் வருமான வரி, உற்பத்தி வரி, இறக்குமதி-ஏற்றுமதி வரி போன்றவையும் மாற்றி அமைக்கப்படும. இவைகள் அதிகரிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். இதன் விளைவுகள் தனி மனிதர் முதல் தொழில் வர்த்தக நிறுவனங்களை பாதிக்கும். சில வரிச் சலுகைகள் இலாபகரமாக இருக்கலாம். சில வரி உயர்வுகள் பாதிப்பாக இருக்கலாம். முன்பு பட்ஜெட் என்பதே சிகரெட், பீடி உட்பட அன்றாடம் பயன் படுத்தும் விலை உயர்வை வைத்துதான் பலருக்கு தெரிய வரும். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. மத்திய அரசும், மாநில அரசுகளும் வருமான வரி, கூடுதல் வரி, கல்வி வரி, சாலை வரி, வளர்ச்சி வரி, விற்பனை வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி,சேவை வரி, பிறப்பு-இறப்பு வரியை தவிர தொட்டதற்கு எல்லாம் வரி வரி வரி என்று போட்டுத் தள்ளுவதால் எல்லோரும் நிதி நிலை அறிக்கையை பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். முன்பு பண்டிதர்களுக்கு மட்டுமே என்று பாராமுகமாய் இருந்த பாமரர்கள் கூட நிதி நிலை அறிக்கையை பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது ஆரோக்கியமான விஷயம் தான். நிதி நிலை அறிக்கையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான விவாதத்தை துவக்கவும் விரும்புகின்றோம். ஒவ்வொருவருக்கும் பல எதிர்பார்ப்புகள் இருக்கும். சிலர் வருமான வரியை குறைக்க வேண்டும் என்பார்கள். சிலர் விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருககும். நிதி நிலை அறிக்கை பற்றி உங்களது ஆலோசனை, எதிர்பார்ப்பு என்ன?எங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யுங்கள். உங்கள் கருத்து பரிமாற்றம் மத்திய, மாநில அரசுகளை மக்களின் மன ஓட்டம், தேவைகள் பற்றி அறிய உதவியாக இருக்கும். இதில் தனிநபர்கள், வியாபாரிகள் சங்கம் போன்ற அமைப்புகள், குடும்ப நிதி அமைச்சர்களான பெண்கள், அவர்கள் அமைப்புக்கள், தொழில் அமைப்புக்கள், தொழிலாளர் சங்கங்கள் எல்லோரும் பங்கு கொள்ளலாம்.உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது:கீழே அளிக்கப்பட்டுள்ள பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்,அல்லது மின் அஞ்சல் வாயிலாக [email protected] அனுப்புங்கள்,அல்லது இணைய தளத்தில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் வெள்ளைத்தாளில் ஆங்கிலம் அல்லது தமிழில் உங்கள் கருத்துக்களை ஒரு பக்கம் மட்டும் எழுதி கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது கூரியரில் அனுப்பலாம்:The Editor - Tamil,Webdunia.com(India)pvt. Ltd.,No:2, Kriba Sankari Street,West Mambalam,Chennai 600 033.