Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷ்ன் பங்கு வெளியீடு!

Advertiesment
கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷ்ன் பங்கு
, சனி, 19 ஜனவரி 2008 (18:11 IST)
ஹைதரபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷ்ன் பங்குகளை வெளியிடுகிறது.

இந்நிறுவனம் ரூ.10 முக மதிப்புள்ள 79 லட்சம் பங்குகளை வெளியிடுகிறது. இதன் விலை ரூ.170 முதல் ரூ.180 என நிர்ணயித்துள்ளது. இந்த பங்குகளுக்கு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த பங்குகளில் 50 விழுக்காடு முதலீட்டு நிறுவனங்களுக்கும், 35 விழுக்காடு சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் முதலீடு கட்டுமான பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள், தளவாட சமான்களை வாங்கவும், மற்றும் நடப்பு மூலதனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil