Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரதநாட்டிய முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் அ‌றிமுக‌ம்!

பரதநாட்டிய முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் அ‌றிமுக‌ம்!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (11:19 IST)
பரதநாட்டியத்தின் நிருத்ய முத்திரை பொறிக்கப்பட்ட புதிய ஒரு ரூபாய் நாணயத்தை பாரத ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது.

இது கு‌றி‌த்தம‌த்‌திஅரசு ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், 25 மி.மீ. சுற்றளவு கொண்ட இந்த புதிய நாணயம் எவர்சில்வர் உலோகத்திலானது. இதன் முன் பகுதியில் நிருத்ய முத்திரை, நாணயத்தின் மதிப்பை குறிக்கும் ஒன்று என்ற இலக்கமும் எழுத்தும் இடம் பெற்றிருக்கும்.

அசோக தூண் சிங்க முத்திரை, சத்தியமேவ ஜயதே என்று இந்தியிலும், இந்தியா, பாரத் என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும், வெளியிடப்பட்ட ஆண்டு ஆகியவை நாணயத்தின் பின் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

1906-ஆ‌ம் ஆண்டு இந்திய நாணயச் சட்டப்படி இந்த புதிய நாணயம் செல்லத்தக்கது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களும் தொடர்ந்து செல்லத்தக்கவையாகும் எ‌ன்று கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil