Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை முதலீடு: தபால் மூலம் பயிற்சி!

Advertiesment
பங்குச் சந்தை முதலீடு: தபால் மூலம் பயிற்சி!
, திங்கள், 7 ஜனவரி 2008 (19:54 IST)
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, தனி நபர்கள் இலாகரமாக எதில் முதலீடு செய்யலாம் என்பது பற்றி தபால் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை ஈரோட்டைச் சேர்ந்த ஹிஸ்டா என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஹெரிடேஜ் இந்தியா ஷேர் டிரேடிங் அகாடமி நடத்த உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் கே.சுரேஷ் பாபு திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும் இந்த பயிற்சியில் முதல் மாதத்தில் 300 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அடுத்த மாதங்களில் மாதத்திற்கு 500 பேர் தபால் மூலம் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.3,798. முதலில் சேரும் ஆயிரம் பேருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும். முதலில் பயிற்சி முடிக்கும் 1,000 பேருக்கு மாதம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7,500 வரையிலான மாத சம்பளத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil