அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளிப்பது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது அறக்கட்டளைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அரசு ஒவ்வொரு அறக்கட்டளையின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கிறது.
இதற்கு பதிலாக அறக்கட்டளைகளே சுதந்திரமாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்காக இந்திய அறக்கட்டளைகள் சட்டத்தின் எஃப் - 20 வது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்படும். இதன் படி எந்த வகையான பங்குகளில் அறக்கட்டளைகள் முதலீடு செய்யலாம் என்று அரசிதழில் வெளியிடப்படும். இதற்கான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தின் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.