Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை கடன் : வங்கிகளுக்கு கட்டுப்பாடு!

Advertiesment
பங்குச் சந்தை கடன் : வங்கிகளுக்கு கட்டுப்பாடு!
, சனி, 15 டிசம்பர் 2007 (19:04 IST)
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதியங்கள், அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு ஆகியவைகளுக்கு கடன் வழங்குவதற்கு வங்கிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

தற்போது வங்கிகள் அவைகளின் மொத்த முதலீட்டில் 40 விழுக்காடு வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த 40 விழுக்காட்டிலும் வங்கிகள் நேரடியாக 20 விழுக்காடு வரை தான் முதலீடு செய்ய முடியும். மீதம் உள்ள 20 விழுக்காடு வரை பங்குகள் வாங்க கடன் வழங்குவது, பங்குகளின் மீதான அடமான கடன் போன்ற முறைகள் மூலம் வழங்க முடியும்.

இப்போது ரிசர்வ் வங்கிகள் பரஸ்பர நிதி நிதியங்களுக்கு வழங்கப்படும் கடன், அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்காக, பங்குச் சந்தையில் பொறுப்பு ஏற்றுக் கொள்வது ஆகியவையும் பங்குச் சந்தை முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில் வங்கிகள் பரஸ்பர நிதியங்கள் அவை வெளியீடும் யூனிட்டுகளை திரும்ப வாங்கும் போது, அவைகளுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டால் மட்டுமே கடன் வழங்க வேண்டும். மற்ற சமயங்களில் அதாவது பரஸ்பர நிதியங்கள் பங்குகள் வாங்குவதற்கு வங்கிகள் கடன் வழங்கினால், அந்த தொகை வங்கிகளின் பங்குச் சந்தை முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதே போல் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பணம் செலுத்த முடியாமல் போகும் சமயத்தில், அவர்களுக்காக பங்ச் சந்தைக்கு வங்கிகள் பணம் செலுத்த ஏற்றுக் கொள்ளும் பொறுப்பையும் (தொகையையும்) வங்கிகளின் பங்குச் சந்தை முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்காக ஏற்றுக் கொண்டுள்ள எல்லா பொறுப்புகளையும் ஆறு மாத காலத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளின் வருடாந்திர கணக்கு அறிக்கையை ஆய்வு செய்தது. இதன் மூலம் சில வங்கிகள் பரஸ்பர நிதியங்களுக்கு அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்திருப்பது தெரிய வந்தது. அத்துடன் இவை பங்குச் சந்தையில் பரஸ்பர நிதியம் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சார்பாக அதிகமான தொகைக்கு பொறுப் பேற்றுக் கொண்டுள்ளதும் தெரிய வந்தது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் அந்நிய நாட்டு வங்கிகள் பயன் அடையும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இனி அவைகளுக்காக பங்குச் சந்தையில் பொறுப்பேற்றுக் கொள்ளும் வங்கி கணக்கில் அதிக தொகை இருப்பில் வைக்க வேண்டும். இதன் இருப்பை பொறுத்தே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாட்டினால் வங்கிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், ஒரு சில அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. பரஸ்பர நிதியங்கள் மிக குறைந்த காலத்திற்கே வங்கிகளில் கடன் வாங்குகின்றன. இந்தியாவில் ஒரே நேரத்தில் பரஸ்பர நிதியங்களில் யூனிட்டுகளை திருப்பி செலுத்தும் வழக்கம் இன்னும் ஏற்படவில்லை. இவைகளிடம் யூனிட் வாங்கியவர்கள் ஒரே நேரத்தில் திருப்பி செலுத்தும் போது மட்டுமே பண நெருக்கடி ஏற்பட்டு வங்கிகளை அணுகுவார்கள். இந்த நிலை இன்னும் ஏற்படவில்லை என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil