Publish Date: Tue, 11 Dec 2007 (17:21 IST)
Updated Date: Tue, 11 Dec 2007 (17:21 IST)
பி.ஒ.சி. இந்தியா லிமிடெட் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு மூலம் இயங்கும் கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லின்டி ஏ.ஜி. கூட்டு நிறுவனமாகும்.
தற்போது பி.ஒ.சி. இந்தியா 362 லட்சம் பங்குகளை, ஜெர்மன் நிறுவனமான லின்டி ஏ.ஜி. நிறுவனத்திற்கு அல்லது அதன் துணை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை 1 பங்கு ரூ.165-க்கு குறையாமல் விற்பனை செய்யப்படும்.
இதன் மூலம் பி.ஒ.சி. இந்தியா நிறுவனத்தில் ஏ.ஜி. நிறுவனத்தின் பங்குகள் 73.99 விழுக்காடாக அதிகரிக்கும். தற்போது இதற்கு 54.80 விழுக்காடு பங்குகள் உள்ளது.