இந்திய விமானப்படையின் வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது.
இந்த எவர்சில்வர் நாணயத்தில் நேர் கோடுகளால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு பாகத்தில் அசோக சின்னமும், அதன் கீழ் சத்தயமே ஜெயதே என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு இருக்கும். நாணயத்தின் மதிப்பை குறிக்கும் வகையில் 2 என்ற எண் இடம் பெற்று இருக்கும்.
மற்றொரு புறத்தில் விமானப் படையின் 75 ஆண்டு வளர்ச்சியை எடுத்துக் காட்டும் வகையில் முதல் போர் விமானமான வாபிடியின் படமும், சமீபத்திய நவீன் போர் விமானமான எஸ்.யூ.30 ரக விமானத்தின் படமும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
இந்த புதிய நாணயம் கூடிய விரைவில் பொது மக்களின் புழக்கத்திற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.