Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வ‌ங்‌கிக‌ளி‌ல் வட்டி விகிதம் குறையும்!

வ‌ங்‌கிக‌ளி‌ல் வட்டி விகிதம் குறையும்!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (11:04 IST)
ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்த பொருளாதார ஆய்வு கொள்கையால் வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் திரட்டும் வைப்பு நிதிக்கு ஈடாக ரிசர்வ் வங்கியில் வைக்கும் ரொக்க இருப்பு நிதியை அரை விழுக்காடு அதிகரித்தது. முன்பு 7 விழுக்காடாக இருந்ததை, 7.5 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரொக்க இருப்பு அரை விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது
இதனால் தற்போதைய நிலையில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி சந்தையில் புழங்கும் ரூபாய், இந்திய ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்கப்படும்.

பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பல நிதி நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் வங்கிகள் மத்தியில் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

இது குறித்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செய‌ல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான கே.வி.காமத் கூறுகையில், ரொக்க இருப்பு விகிதம் அதிகரித்திருப்பதால் வட்டி உயரும் என்று நினைக்க தேவையில்லை. இதை அதிகரிப்பதால், தற்போது விதிக்கும் வட்டியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். எங்கள் வங்கி வட்டியை குறைப்பது குறித்து ஆலோசிக்கும் என்று கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் ஓ.பி.பத் கூறுகையில், அதிக பணப்பழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் இதனால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தாலும், அது சர்வதேச கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட வேண்டும். கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பது பற்றி பரி‌சீலிப்பது அவசியம் என்று கூறினார்.

அதே நேரத்தில் டி.எஸ்.பி மிரில் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் இந்திரநில் சென்குப்தா கூறுகையில், வங்கிகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. நீங்கள் ஒவ்வொரு துறை வாரியாக கடன் கொடுத்திருப்பதை பார்த்‌தீர்கள் என்றால், 2006 நிதியாண்டில் 45 விழுக்காடு வீட்டு கடன் கொடுக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் வீட்டு கடன் 16 விழுக்காடு குறைந்துள்ளது.

எனவே சில்லறை கடனுக்கான வட்டி குறையலாம், தற்போது பண்டிகை காலத்தை ஒட்டி வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வட்டி விகிதம் தொடரலாம்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9 முதல் 9.5 விழுக்கா‌ட்டிற்கு பதிலாக 8.5 முதல் 9 விழுக்காடு வரை இருக்கும். வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் சில மாதங்களுக்கு குறையலாம். பிறகு வட்டி அதிகரித்துவிடும். இதே மாதிரி சென்ற ஆண்டு முதலில் கடன், வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்தது. பிறகு இரண்டு வட்டி வி‌கிதங்களுமே அதிகரித்தது என்று சென்குப்தா தெரிவித்தார்.

ஹெச்.டி.எப்.சி சேர்மன் தீபக் பரேக் கூறுகையில், ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியிருப்பதால் வட்டி விகிதம் அதிகரிக்கும் என்று நினைக்கவில்லை என்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil