ரிசர்வ் வங்கி 2007 - 08 நிதி ஆண்டிற்கான பொருளாதார கொள்கையை பரிசீலித்து, அடுத்த ஆறு மாதத்திற்கான கொள்கையை அறிவித்ததுள்ளது.
இதன்படி, வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. வங்கிகள் அவைகளின் மொத்த இருப்பு மீது ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்துள்ளது. இது முன்பு 7 விழுக்காடாக இருந்தது. தற்போது 7.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது நவம்பர் 10 ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
வங்கிகள் தங்களிடம் உள்ள அதிக கையிருப்பை ரிசர்வ் வங்கியில் செலுத்தினாலோ அல்லது ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தாலோ வங்கிகளிடம் இருந்து ரொக்க இருப்பை வாங்கி அவைகளுக்கு வட்டி வழங்குகிறது. இதற்காக ரிசர்வ் வங்கி அவ்வப்போது விலைப் புள்ளிகளை கோரும். இந்த " ரிபோ " வுக்கு 6 விழுக்காடு வட்டி வழங்கி வந்தது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நிதியாண்டில் மீதம் உள்ள மாதங்களிலும் உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.5 விழுக்காடாக இருக்கும். பெட்ரோலிய கச்சா எண்ணை விலை அதிகரித்து. இதனால் இறக்குதிக்கான செலவு, பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்தாலும் கூட, உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.5 விழுக்காடு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
தற்போது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 6 விழுக்காடு வட்டியில் கடன் வழங்குகிறது. இதில் மாற்றம் செய்யப் படவில்லை.