Newsworld Finance News 0710 26 1071026024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் கிராம் ரூ.1000 ஆனது!

Advertiesment
மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை கடுமையாக அதிகரித்தது.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.350-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125-ம் அதிகரித்தது.

வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்கள், தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிகளவு தங்கம் வாங்கியதால் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதேபோல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்கியதால் வெள்ளி விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 15-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை விலை நிலவரம்.

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.10,000
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,950
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,750

Share this Story:

Follow Webdunia tamil