மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய 5 நிமிடங்களில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 132 புள்ளிகள் சரிந்து.
பிறகு நிலைமை சீராகி, பங்குகளின் விலை அதிகரிக்க துவங்கியது. இதனால் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ், நேற்றைய இறுதி நிலவரத்தை விட 309.93 புள்ளிகள் அதிகரித்து 19,080.82 என்ற அளவை எட்டியது. ( நேற்றைய இறுதி நிலவரம் 18770.89 )
இதே போல் மிட்கேப் பிரிவு 164.10 புள்ளிகளும், சுமால் கேப் பிரிவு 179.75 புள்ளிகளும், பி.எஸ்.இ 100 பிரிவு 190.84 புள்ளிகளும், பி.எஸ்.இ 200 பிரிவு 45.17 புள்ளிகளும், பி.எஸ்.இ 500 பிரிவு 143.38 புள்ளிகளும் அதிகரித்தன.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டு, பிறகு பங்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால் நிப்டி குறியீட்டு எண் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது, காலை 11.20 நிலவரப்படி நிப்டி நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 104.80 புள்ளிகள் அதிகரித்தது. ( நேற்றைய இறுதி நிலவரம் 5568.95 )
தேசிய பங்குச் சந்தையிலும் மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் உ.யர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல் அண்ட் டி, என்.டி.பி.சி, ஒ.என்,ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார், டாடா ஸ்டீல், டி.சி.எஸ், விப்ரோ, ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பர்திஏர்டெல், பி.ஹெச்.இ.எல், சிப்லா, கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி. எப்.சி வங்கி, ஹுன்டால்கோ, ஐ.சி.ஐ.சி,ஐ வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, ரான்பாக்ஸி ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.
டாக்டர் ரெட்டி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகியவற்றின் பங்கு விலை மட்டும் குறைந்தது.