Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தையில் தீவிரவாதிகளின் முதலீடு இல்லை : செபி!

Advertiesment
பங்குச் சந்தையில் தீவிரவாதிகளின் முதலீடு இல்லை : செபி!

Webdunia

, வெள்ளி, 26 அக்டோபர் 2007 (11:11 IST)
பங்குச் சந்தையில் தீவிரவாதிகளின் பணம் முதலீடு செய்துள்ளதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று செபி சேர்மன் தாமோதரன் தெரிவித்தார்.

பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியின் இயக்குநர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக பங்கேற்பு பத்திரங்கள் ( பார்சிபட்டரி நோட்) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை ஒழுங்குபடுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு பின் செபியின் சேர்மன் தாமோதரனிடம் செய்தியாளர்கள் பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, தற்போது பங்குச் சந்தையில் தீவிரவாதிகள் முதலீடு செய்திருப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று பதிலளித்தார்.

பங்குச் சந்தையில் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் தீவிரவாதிகள் முதலீடு செய்வதை கண்காணிக்க, எந்த நடைமுறையாவது பின்பற்றப்படுகிறதா என்று சே‌ர்ம‌ன் தாமோதர‌னிட‌ம் கேட்டதற்கு, எல்லா விஷயங்களுக்கும் செபியால் பதில் பதில் சொல்ல முடியாது. தீவிரவாதிகளின் பணம் வருவதை கண்காணிக்க மற்ற புலனாய்வு அமைப்புகளும், கண்காணிப்பு பிரிவுகள் இருக்கின்றன.

பங்குச் சந்தையின் முதலீடுகள் வங்கிகள் வாயிலாக வருகிறது. இந்த வங்கிகளில் வாடிக்கையாளரை பற்றிய விபரம் அறியும் முறை இருக்கின்றது. அத்துடன் பங்குச் சந்தையில் புரோக்கர்கள், டிபாசிட்டரி வாயிலாகவும் முதலீடு செய்யப்படுகின்றது. இந்த அமைப்புகளிலும் வாடிக்கையாளரை பற்றி அறியும் முறை இருக்கின்றது என்று கூறினார்.

இந்த வருட தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.ே.நாராயணன், பங்குச் சந்தையில் முதலீடு அதிகரிப்பதற்கு காரணம், தீவிரவாதிகள் முதலீடு செய்வதாக கூட இருக்கலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நியூயார்க்கில் சென்ற வாரம், பங்குச் சந்தையில் டிரைவ்விட்சில், பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவர்கள் பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதால், " வாடிக்கையாளரை பற்றி அறியும் முறையி‌ன்படி'' பங்குகளை வாங்குபவ‌ர்க‌ள் யார் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil