இன்று மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே சூடு பிடித்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 650 புள்ளிகள் அதிகரித்தது.
கடந்த வாரம் இருந்த நிலைமை மாறி பங்குகளின் விலைகள் அதிகரி்க்க தொடங்கின. காலை 12.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 655.26 புள்ளிகள் அதிகரித்தன.
இதே போல் மி்டகேப், சுமால் கேப். பி.எஸ்.இ 100, 200, 500 ஆகிய பிரிவுகளின் குறியீட்டு எண்ணும் அதிகரித்தன.
நேற்று பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபி, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வதற்கு விதிக்க எண்ணியிருந்த சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இதன்படி அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்
உரிமம் பெறும் வரை பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இவற்றின் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என அறிவித்தது.
இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பித்தன.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டி.எல்.எப், இன்போசியஸ், பர்தி, எஸ்.பி.ஐ., டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி 172 புள்ளிகள் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.