Publish Date: Wed, 17 Oct 2007 (20:55 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
தங்கம் விலை கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இன்று 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.9,800 ஆக உயர்ந்தது.
பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 குறைந்தது.
தங்கத்தின் விலை உயர காரணம் அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களும், உள்நாட்டு நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதுதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் மாதங்களில் தொடர்நது பண்டிகைகள் வருவதாலும், திருமணம் போன்ற சுய நிகழ்சிகளுக்காக தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,800 (நேற்று 9,765 )
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,750 (9,715 )
பார் வெள்ளி கிலோ ரூ.18,355 (18,470 )