Publish Date: Mon, 15 Oct 2007 (11:20 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (11:19 IST)
தமிழ்நாடு மின் , மின்னணு பொறியியல் மற்றும் குழாய் விற்பனையாளர்கள் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு மதிப்பு கூட்டு வரியை ( வாட் ) உடனடியாக கடைப்பிடிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சங்கத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக இணை செயலாளர் எம். சதாசிவம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் மதிப்பு கூட்டு வரியை கடைபிடிக்கின்றனர். ஒரு சிலர் மட்டும் தயக்கம் காட்டுகின்றனர். எல்லோரும் மதிப்பு கூட்டுவரியை கடைபிடித்தால், வியாபாரம் செய்யும் எல்லா தரப்பினருக்கும் பலன் உண்டாகும்.
இந்த வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உள்நாட்டு வியாபாரிகளின் நலனை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொள்ளபட்டதாக தெரிவித்தார்.
Webdunia
Publish Date: Mon, 15 Oct 2007 (11:20 IST)
Updated Date: Mon, 15 Oct 2007 (11:19 IST)