Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக பொருளாதார வளர்ச்சி குறைவால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை!

உலக பொருளாதார வளர்ச்சி குறைவால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை!

Webdunia

, வெள்ளி, 12 அக்டோபர் 2007 (20:19 IST)
உலக பொருளாதார வளர்ச்சி குறைவினால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

டில்லியிலஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைமை நிர்வாகிகளின் ஐந்தாவது மாநாட்டை பிரதமர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியாதாவது :

உலக அளவில் மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறையும் என்ற போக்கு நிலவுகிறது. இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு ஏற்படக்கூடியதே. இதனால் நமது பொருளாதார வளர்ச்சியில் பெரிய அளவு பாதிப்பு இருக்காது அல்லது இதனால் நமது பொருளாதார வளர்ச்சி குறையாது.

ஆயினும் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் போது, அதன் தாக்கம் நமது வளர்ச்சியிலும் இருக்கும். அதே நேரத்தில் இதனை தாங்கும் சக்தி நமக்கு உள்ளது.

உலக பொருளாதாரத்துடன் உங்கள் பொருளாதாரத்தையும் இணைக்கும் போது, அதன் பாதிப்பு உங்களுக்கும் ஏற்படும். இப்போது நமது அயல் நாடுகளுடனான வர்த்தகம், தேசிய வருவாயை விட அதிகமாக இருக்கின்றது. அதிகளவு அந்நிய மூலதனம் இந்தியாவில் முதலீடு செய்யப்படுகிறது.

இப்போது மற்ற நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார ரீதியான உறவு பரந்த அளவிலும், அதிக எண்ணிக்கையிலான நாடுகளுடனும் உள்ளது. உலக அளவில் நடக்கும் வர்த்தகத்திலும், மூதலீடு உயர்விலும் நமது பங்கு அதிகரித்து வருகிறது. முன்பு இருநத்தைவிட நமது பொருளாதாரம் சர்வதேச அளவில் அதிகளவு இணைந்துள்ளது. இதனால் இந்தியாவின் குரலுக்கு மதிப்பு இருக்கும், இந்தியாவின் கருத்து கேட்கப்படும்.

கடந்த ஐந்து வருடங்களாக உலக பொருளாதாரத்துடன் இணையும் வகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுமார் 9 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.

உலக பொருளாதார வளர்ச்சி 2007 இல் 5.2 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் 4.8 விழுக்காடாக உள்ளது. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி சென்ற வருடம் 2.8 விழுக்காடாக இருந்தது. இந்த வருடம் 1.9 விழுக்காடாக குறைந்துள்ளது. இதே போல் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் 2.5 விழுக்காட்டில் இருந்து 2.1 விழுக்காடாக குறைந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil