Publish Date: Thu, 11 Oct 2007 (20:32 IST)
Updated Date: Thu, 11 Oct 2007 (20:31 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் மாற்றம் இல்லை. 1 டாலர் ரூ.39.30 என்ற நிலையில் இருந்தது.
காலையில் 1 டாலர் ரூ.39.30/32 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. பெரிய அளவில் மாற்றம் இல்லை.
இன்று அந்நியச் செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடவில்லை. நிதிச் சந்தையில் இருந்து 46,000 கோடியை 33 விலைப்புள்ளிகள் மூலம் பெற்றதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்று ரிசர்வ் வங்கி 1 டாவர் ரூ.39.34 என அறிவித்தது. இன்று 1 டாலர் ரூ.39.31 என அறிவித்தது.