இந்திய ரூபாயின் பணவீக்கம் 3.42 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம 3.42 விழுக்காடாக இருக்கிறது. சென்ற வாரம் பணவீக்கம் 3.23 விழுக்காடாக இருந்தது.
இந்த வாரம் பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரித்ததே.
சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.43 விழுக்காடாக இருந்தது என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதம் 5 விழுக்காடிற்கும் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கும் குறைவாக பணவீக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது வாரமாக நான்கு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளது.