Publish Date: Tue, 02 Oct 2007 (12:57 IST)
Updated Date: Tue, 02 Oct 2007 (12:56 IST)
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1,200 கூடை தக்காளி அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி ஆயிரத்து 200 கூடை தக்காளிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.