Publish Date: Tue, 25 Sep 2007 (15:16 IST)
Updated Date: Tue, 25 Sep 2007 (15:16 IST)
இன்றும் அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கு எதிரான ரூயாயின் மதிப்பு சிறிது உயர்ந்தது.
காலையில் வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தக மையத்தில், நேற்றைய இறுதி நிலவரமான 1 டாலர் ரூ.39.76 / 39.77 என்ற நிலைமையிலேயே இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில், சிறிய அளவில் ஒரு டாலர் ரூ.39.80 / 39.81 என்ற விலையில் விற்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்வதால், டாலர் அதிகளவு குவிகின்றது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து வருவதாக அந்நியச் செலாவணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.