Publish Date: Fri, 21 Sep 2007 (12:58 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
இன்று காலை மும்பை அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு மூன்று பைசா குறைந்தது.
நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ. 39.89/90 ஆக இருந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் வாங்கும் போக்கு அதிகளவு காணப்படவில்லை. ஆனால் அதிகளவு டாலரின் மதிப்பு சரியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
டாலரின் மதிப்பு குறைந்ததற்கு, பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதுமே 27 புள்ளிகள் சரிந்தும் ஒரு காரணம் எனறு கூறப்படுகிறது.