Publish Date: Tue, 18 Sep 2007 (14:09 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:12 IST)
நேரடி வரி அடையாள குறியீட்டு எண் அறிமுகப்படுத்த வரி நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இது அக்டோபர் மாதம் தயாராகிவிரும் என்று நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் பார்த்தசாரதி சோமி கூறினார்.
சென்னையில் தென் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சங்க 97 வது வருடாந்திர பொது மாநாட்டை துவக்கி வைத்து பார்த்தசாரதி சோமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இந்த புதிய நேரடி வரி அடையாள குறீயீட்டு எண் ஏற்படுத்தும் நோக்கம், வரி செலுத்துவோருக்கு சட்ட நடைமுறைகளை எளிதாக்குவதுடன், நிறுவன வரிகள், வெளிநாட்டு இந்தியர்களுக்கான வரி, சிறப்பு பொருளாதார மண்டல வரி விலக்கு உட்பட பல அம்சங்களை எளிதாக்குவதுதான் என தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள வருமான வரி சட்டத்தில் ஒவ்வொரு வருடமும் திருத்தங்கள் செய்யப்படுவதால், இது வரித்துறையில் உள்ள நிபுணர்கள், அதை அமல்படுத்தும் அதிகாரிகள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது. இதற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப் போகும் புதிய வரி அடையாள குறியீடு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
இந்த புதிய வரி அடையாள குறீயீட்டு எண் நடைமுறைக்கு வரும் போது, வரித் தொடர்பான சட்டத்தில் உள்ள பல சிக்கலான பிரிவுகள், வரி தொடர்பான இரட்டை அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகள் ஆகியவை நீக்கப்படும். இதை பரிசீலித்து, கருத்துக்களை தெரிவிக்க பல்வேறு வர்த்தக சங்கங்கள், நிதி நிபுணர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுப்பி உள்ளது என்று சோமி கூறினார்.
Webdunia
Publish Date: Tue, 18 Sep 2007 (14:09 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:12 IST)