Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பாதிப்பு!

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பாதிப்பு!

Webdunia

, திங்கள், 17 செப்டம்பர் 2007 (14:13 IST)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடன் - நிதி நெருக்கடியால், அமெரிக்க நுகர்வோர் சந்தை, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தியாவிலும் பொருளாதார தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என தெரிய வருகிறது!

அமெரிக்காவில் கடன் - நிதி நெருக்கடியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பாக இந்தியாவியன் பங்குச் சந்தையின் குறீயீட்டு எண்கள் கடந்த சில வாரங்களாக இறங்கு முகமாக உள்ளன. அத்துடன் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையறிய இந்திய வணிக கூட்டமைப்பின் சார்பில் 319 தலைமை செயல் நிர்வாகிகள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் 72 விழுக்காடு நிர்வாக இயக்குநர்கள், அமெரிக்காவில் நுகர்வோர் பொருட்கள் விற்பனை குறைவதாலும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறைந்திருப்பது ஆகியன. ஐரோப்பா, சீனா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத்தில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும். இந்நாடுகளின் பொருளாதாரத்துடன், இந்தியாவின் பொருளாதாரம் ஒருங்கிணைத்து இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவை துறையின் ஏற்றுமதி, இந்திய பொருளாதாரத்தில் 45 சதவித பங்கை வகிக்கிறது. இத்துறை கடந்த நான்கு வருடங்களாக வருடத்திற்கு 30 சதவித வளர்ச்சியை எட்டி வருகிறது.

இந்தியாவின் ஏற்றுமதியில் 60 சதவிதம் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றம் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்நாடுகளின் ஏற்றுமதியும் அமெரிக்க நுகர்வோர்களின் சந்தையையே நம்பி உள்ளது. இந்நாடுகளின் பொருளாதாரத்துடன், இந்திய பொருளாதாரமும் ஒருங்கிணைந்து இருப்பதால், இதன் எதிரொலியாக இந்தியாவும் பாதிக்கப்படும்.

அமெரிக்காவின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதற்கான அடையாளங்கள் வெளிப்படையாக தெரிய வந்துள்ளன. விவசாய பணிகள் அல்லாத மற்ற துறைகளின் வேலை வாய்ப்பு கடந்த மாதம் 4,000 ஆக குறைந்துள்ளது. இது 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த அளவு குறைந்தது முதல் தடவை. தனியார் துறையின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதமாக தனியார் துறை வேலை வாய்ப்பு சராசரியாக 70,000 என்ற அளவில் உள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 1,65,000 ஆக இருந்தது. இதனால் அமெரிக்க நுகர்வோரின் வாங்கும் சக்தி குறையும். இது அமெரிக்காவிற்கு நேரடியாகவும், மற்ற நாடுகளின் நிறுவனங்களின் மூலமாக ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என கருத்து கணிப்பில் 79 தலைமை செயல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதன் அடையாளமே உற்பத்தி பொருட்களின் வளர்ச்சி ஜூலை மாதத்தில் 7.1 சதவிதம் மட்டுமே இருந்தது. இது சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 13.2 சதவிதமாக இருந்தது.

91 சதவித தலைமை செயல் நிர்வாகிகள் வேலை வாய்ப்பை அளிக்கும் உற்பத்தி துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதற்கு கவலை தெரிவித்துள்ளனர். ஏனெனில் மத்திய அரசு நெருக்கடிக்குள்ளாகி உள்ள வியசாயத்துறையின் தொழிலாளர்களை, உற்பத்தி துறைக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

76 சதவித தலைமை செயல் நிர்வாகிகள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றுமதி வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி 2006 ஜூலையில் 40.27 சதவிதமாக இருந்தது. இது இந்த வருடம் ஜூலையில் 18.52 சதவிதமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி நிலையில் வைத்திருப்பது கடினம் என்பதையே காட்டுவதாக கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil