Newsworld Finance News 0709 06 1070906008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேரடி வரி வருவாய் 42 விழுக்காடு அதிகரிப்பு!

Advertiesment
நேரடி வரி வருவாய் தனி நபர் வருமான வரி
மத்திய அரசிற்கு நேரடி வருவாயின் மூலம் கிடைக்கும் நிதி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் 42 விழுக்காடு அதிகரித்துள்ளது!

2006-07 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ரூ.42,980 கோடியாக இருந்த நேரடி வரி வருவாய் 2007-08 நிதியாண்டின் முதல் 5 மாதத்தில் 61,030 கோடியாக அதிகரித்துள்ளது.

பெரும் நிறுவனங்களிடம் இருந்து கிட்டும் நேரடி வரி வருவாய் ரூ.22,587 கோடியிலிருந்து ரூ.33,766 கோடியாக அதிகரித்துள்ளது. இது 49.49 விழுக்காடு உயர்வாகும்.

தனி நபர் வருமான வரி வருவாய் கடந்த நிதியாண்டின் 5 மாதங்களில் ரூ.20,340 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் 33.76 விழுக்காடு ரூ.27,206 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிதியாண்டில் நேரடி வருவாய் இலக்காக ரூ.1,68,401 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil