2007-08 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9.3 விழுக்காடு என்று மத்திய அரசின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது!
உற்பத்தித் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வளர்ச்சியின் காரணமாகவே முதல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 9.3 விழுக்காடு அளவிற்கு உள்ளது என்று கூறியுள்ள மத்திய அரசின் புள்ளிவிவரம், 2006-07 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு ஒட்டுமொத்த வளர்ச்சியான 9.4 விழுக்காடாக இருந்தாலும், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி நிலையாகவே உள்ளதென கூறியுள்ளது.
2006-07 ஆம் நிதியாண்டில் 12.3 விழுக்காடாக இருந்த உற்பத்தித் துறையின் வளர்ச்சி, இந்த நிதியாண்டில் 11.9 விழுக்காடாக குறைந்துள்ளது என்றும் அரசின் புள்ளி விவரம் கூறியுள்ளது.